LEGO எனப்படும் குற்றிகளைப் பயன்படுத்தி உருவங்களை ஒன்லைனில் உருவாக்கும் புதிய முறையினை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நவீன தொழில்நுட்பமானது கூகுள் குரோம் உலாவிகளில் மட்டுமே செயற்படக்கூடியதாகக் காணப்படுவதுடன், நவீன இணையத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு முப்பரிமாண சூழலில் விரும்பிய பொருட்களை உருவாக்கிக்கொள்ளவும் முடியும்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட வடிவத்தினை பின்னர் நமது வசதிக்கேற்ப தனித்தனிப்படங்களாக மாற்றி மின்னஞ்சலுக்கு அனுப்புவதன் மூலம் குறித்த உருவத்தினை நாம் தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.